`இனி திரும்பி போகமாட்டேன்' – பிரதமர் மோடியிடம் நிதிஷ் குமார் உத்தரவாதம்

Modi Nithish.jfif .png

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சமீபத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியில் இருந்தும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருந்தும் விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்து மீண்டும் முதல்வரானார். முதல்வரான பிறகு நேற்று இரவு நிதிஷ் குமார் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியில் செல்லமாட்டேன் என்றும், 1995-ம் ஆண்டில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதையும் நினைவு கூர்ந்தார். இருவரும் பீகார் அரசியல் நிலவரம் குறித்தும் பேசினர். அதனை தொடர்ந்து அமித் ஷா மற்றும் பா.ஜ.க.தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோரையும் நிதிஷ் குமார் சந்தித்து பீகார் அமைச்சரவை விரிவாக்கம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.

வரும் 12-ம் தேதி நிதிஷ் குமார் அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறது. இது தவிர வரும் 27-ம் தேதி பீகாரில் 6 ராஜ்ய சபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்தும், மக்களவை தேர்தல் குறித்தும் பா.ஜ.க.தலைவர்களிடம் நிதிஷ் குமார் பேசினார். மக்களவை தேர்தலுக்கு முன்பு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைக்க பா.ஜ.க காய் நகர்த்தி வருகிறது. இதற்காக சந்திரபாபு நாயுடு நேற்று இரவு டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். ஆந்திராவில் ஏற்கனவே முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவசர நேரத்தில் பா.ஜ.க.வுக்கு உதவி செய்திருக்கிறது. எனவே இவ்விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவு எடுக்க பா.ஜ.க. தயங்கி வருகிறது.

இதே போன்று அகாலி தளம் கட்சியுடனும், பிஜு ஜனதா தளம் கட்சியுடனும் கூட்டணி வைக்க பா.ஜ.க. தீவிரம் காட்டி வருகிறது. பாராளுமன்றத்தில் பா.ஜ.க.கூட்டணி 400 இடங்களை பெறும் என்று பிரதமர் மோடி கூறிவிட்டார். அதனை செயல்படுத்திக் காட்டவேண்டும் என்பதற்காக பா.ஜ.க.தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மக்களவை தேர்தல் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்கவேண்டும் என்று பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *