Tamil News Live Today: ஸ்பெயின் பயணம் நிறைவு… சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

Gfqzlskxeaaofsu.jpg

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த மாதம் 27 -ம் தேதி பயணம் மேற்கொண்டார். அவருடன் அவர் மனைவி துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பயணம் மேற்கொண்டனர். இந்த பயணத்தின் போது ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. சில முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை புறப்பட்டார். இன்று காலை 8 மணி அளவில் முதல்வர் சென்னை திரும்பினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *