‘400 + தொகுதிகளில் வெற்றி உறுதி’ – மோடியின் நம்பிக்கை கணிப்பு சாத்தியம்தானா? – Modi assures that NDA will win over 400 seats in the coming lok sabha elections

Modi Parliment.png

அதாவது, தற்போது நடைபெற்றுவரும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள், இன்னும் 1000 ஆண்டுகளுக்கு நடக்குமா என்ற கிலி ஏற்படுகிறது. 1000 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளை மத்திய அரசு அடக்கியாளுமா.. 1000 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் மாநில அரசின் மீது ஏவிவிடப்படுமா என்ற அச்சம் எழுகிறது. ‘சண்டிகரில் ஜனநாயகப்படுகொலை நடந்திருக்கிறது’ என்று உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறதே.

வெறும் 35 வாக்குகள் பதிவாகிற மேயர் தேர்தல், துணை மேயர் தேர்தலிலேயே எவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்கிறது. உச்ச நீதிமன்றமே அதில் தலையிட்டு கண்டிக்கிறது. எவ்வளவு பெரிய அப்பட்டமான விதிமீறல் இது. முறைகேடுகள் கேமராவில் பதிவாகிறது என்று தெரிந்தும், முறைகேட்டில் ஈடுபடுகிற தைரியத்தை யார் கொடுத்தது? அது, ஆளுநர் கொடுத்த தைரியமாகத்தான் இருக்கும். ஏனென்றால், சண்டிகர் நிர்வாகத்துக்கு ஆளுநர்தான் நிர்வாகி.

மாநிலங்களை அடக்கியாளுவதும் ஆளுநர்கள் மூலமாகத்தான். மாநிலங்களில் ஜனநாயகப் படுகொலைகளை நிகழ்த்துவதும் ஆளுநர் மூலமாகத்தான். இதுதான் 1000 ஆண்டுகளுக்குத் தொடரும் என்று பிரதமர் மோடி சூசகமாகச் சொல்கிறார் என்றுதான் புரிந்துகொள்கிறேன்” என்கிறார் தராசு ஷ்யாம்.

ஆனால், ‘எதிர்க் கட்சிகளின் கூட்டணி வலுவில்லாமல் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலம்’ என்று கூறும் பா.ஜ.க தரப்பினர், ‘அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டிருப்பதன் மூலம் வடமாநிலங்களில் மிகப்பெரிய வெற்றி எங்களுக்கு கிடைக்கும். கூடவே கடந்த 10 ஆண்டுகளின் திட்டங்கள் எங்களுக்கு பலன் கொடுக்கும். எனவே, பிரதமர் சொன்னதைப்போல, 370 தொகுதிகளில் வெற்றிபெறுவோம்’ என்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *