ராஜ்ய சபா: `காங்கிரஸ்… நேரு… அம்பேத்கர்… இட ஒதுக்கீடு!’ – பிரதமர் மோடியின் முழு உரை | PM Modi slams again congress and nehru in rajya sabha during budget session

Screenshot 2024 02 07 17 21 32.png

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ம் தேதி 2024-25ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 9-ம் தேதிவரை நடைபெறும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், இரு அவைகளிலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் மோடி உட்பட எம்.பி-க்கள் உரையாற்றி வருகின்றனர். இதில், நேற்று முன்தினம் மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது உரையாற்றிய மோடி, “ஒரே குடும்பம் கட்சி நடத்துவதுதான் குடும்ப அரசியல். ஒரே முகத்தை முன்னிலைப்படுத்த மீண்டும், மீண்டும் முயல்வதால்தான் காங்கிரஸை இழுத்து மூடும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. நாட்டைப் பிளவுபடுத்துவதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

வரும் மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க 370 இடங்களையும், எங்களின் என்.டி.ஏ கூட்டணியின் மூலம் 400-க்கும் மேற்பட்ட இடங்களையும் வெல்லும்” என காங்கிரஸைத் தாக்கிப் பேசியிருந்தார். மேலும், நேருவைத் தாக்கிய மோடி, “பொதுவாக இந்தியர்களுக்குக் கடினமாக உழைக்கும் பழக்கம் இல்லை என நேரு பேசியிருக்கிறார். இந்தியர்கள் சோம்பேறிகள், புத்திசாலித்தனம் குறைவாக உள்ளவர்கள் என நேரு நினைத்தார் என்பதே இதற்கு அர்த்தம்” என்றும் கூறியிருந்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *