`நாங்க கொடுக்குற நிதிய வெச்சுக்கிட்டு, இந்த பேச்சு பேசுறீங்க’- மத்திய அரசை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் | minister anitha radhakrishnan slams central bjp government

Untitled Design 71 .jpg

ஆனால் இன்று எங்கள் இந்து அறநிலையத்துறை அமைச்சர் கோயிலும் கட்டுகிறார், கும்பாபிஷேகமும் நடத்துகிறார். இனி பீகார், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் , மகாராஷ்டிரா எனத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ.க இல்லாமல் காலியாகப் போகிறது. இப்போதும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இல்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பா.ஜ.க-வை விரட்டிக்கொண்டிருக்கிறார்.” எனக் காட்டமாகப் பேசினார்.

ஆளூர் ஷாநவாஸ்

ஆளூர் ஷாநவாஸ்

அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசத் தொடங்கினார். “தென் மாவட்டங்களை கடும் வெள்ளம் தாக்கியபோது அவர்கள் உதவி செய்ய வரவில்லை, மாறாக உபத்திரம் செய்ய வந்தார்கள். மாதக்கணக்கில் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிமிடம் வரை மக்களின் துயரத்தை அறிவதற்குப் பிரதமர் அங்கே செல்லவில்லை. வெள்ளத்திற்குக் கூட ஏற்கெனவே ஒதுக்கிய நிதியைத்தான் தந்திருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *