“திரைபிரபலத்தை வைத்து நாடாள முயன்றால் எதிர்ப்போம்!” – நா.த.க இடும்பாவனம் கார்த்திக் சூசகம் | NTK Idumbhavanam Karthik On Vijay’s political entry and NIA raid

658f1e457a008.jpg

`விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறது நாம் தமிழர்?”

“வரட்டும் வாழ்த்துகள்.. மண்ணுக்கான, மக்களுக்கான அரசியலை முன்வைக்கட்டும். விஜய் தனது கட்சியின் கொள்கை கோட்பாட்டை சொன்ன பிறகே அதில் நம்மால் கருத்து சொல்ல முடியும், விஜய் கொள்கையை பேசட்டும், மக்களை அரசியல்படுத்தட்டும். பின்னர் எதிர்ப்பதா ஆதரிப்பதா என்பதை பார்த்துக் கொள்ளலாம். ஒரு நடிகர் திரைபிரபலத்தை மட்டும் நாடாள முயன்றால் நிச்சயம் அதனை எதிர்ப்போம்”

`தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அணிகள் களத்தில் போட்டியிடுகின்றனவே?”

“தி.மு.க ஆட்சிமீதான அதிருப்திகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன, பா.ஜ.க பற்றி சொல்ல வேண்டிய தேவையில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு கடும் எதிர்ப்புகள் இருக்கின்றன. அ.தி.மு.க மீது மக்கள் நம்பிக்கை கிடையாது. சொல்லப்போனால் மூன்று கூட்டணிமீதும் வெறுப்பில் இருக்கிறார்கள் மக்கள். அதேசமயம் அரசியல் மாற்று எனச் சொல்லி எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தனித்து களம்காணும் நாம் தமிழர் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். பெருவாரியான வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *