“தரம் தாழ்ந்தவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” – அண்ணாமலைக்கு டி.ஆர்.பாலு பதில் | DMK MP TR Balu slams TN BJP chief Annamalai in yesterday rajya sabha controversy

Gridart 20240207 113030616.jpg

அப்போது, நாடாளுமன்றத்தில் நடந்த விவகாரம் தொடர்பாக அண்ணாமலை கூறியது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி.ஆர்.பாலு, “அண்ணாமலைக்குப் பதில் சொல்லுமளவுக்கு நான் Cheap ஆகிட்டேனா… நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்ட ஆ.ராசாவும் தலித் தான். அப்படியென்றால், ஒரு தலித்தை எதிர்த்து இன்னொரு தலித் (எல்.முருகன்) பேசலாமா… தலித் என்பதை பார்த்ததெல்லாம் நான் பேசல. கேட்ட கேள்விக்கு அந்தத் துறை அமைச்சரோ, துணை அமைச்சரோ பதில் சொல்லலாம். மீன்வளத்துறை துணை அமைச்சருக்கும் (எல்.முருகன்) இந்த கேள்விக்கும் என்ன சம்பந்தம்… எங்களைப் பொறுத்தவரை சாதி, மதம் கிடையாது. இதை அவர்கள் அரசியல் ரீதியாக பேச ஆரம்பித்தால், அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

டி.ஆர்.பாலு

டி.ஆர்.பாலு

அவர்களெல்லாம் குறுகிய கால ஆள்கள்… 65 வருஷமா நாங்கள் அரசியலில் இருக்றோம். நேத்து வந்தவரு அண்ணாமலை… அவருக்குப் பதில் சொல்ற அளவுக்கு நான் தாழ்ந்துபோயிட்டேனா… நாங்கள் என்ன தலித் விரோதியா… தலித்னா அவங்கதானா, இந்துக்கள்னா அவங்கதானா… எங்களுக்கெல்லாம் எதுக்கும் சம்பந்தமில்லையா… 65 வருஷமா அரசியல்ல இருக்கேன்… என்னால சாதி அரசியல் பண்ண முடியாது. அவர் கேக்குற கேள்விக்கு நான் பதில்சொல்லறது என்னை தாழ்வுபடுத்துற மாதிரி, அதை நான் பண்ண மாட்டேன். அவர் முதலில் தன்னடக்கத்தோடு பேசணும். நாடாளுமன்ற விதிமுறைகள் தெரியாமல் முருகன் சார் பேசுறாரு… எனவே தரம் தாழ்ந்த ஒருத்தருக்குப் பதில் சொல்ல முடியாது” என்று கூறினார்.

டி.ஆர்.பாலுவின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “நீங்கள் மலிவான மனிதரா என்பதை உங்கள் 65 வருட அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது, உங்களுடைய சிந்தனையும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும் என்பதை தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு-வுக்கு மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *