ஜோதிடம்

1195463.jpg

பொதுப்பலன்: தற்காப்புக் கலைகள், யோகா, தியானம் பயில, விவாதங்களில் வெற்றி பெற, பயணம் தொடங்க, பழைய நண்பர்களை சந்திக்க நல்ல நாள். ஹயக்ரீவ பெருமாளை வழிபடுவதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். மன உளைச்சல், மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் புதன் பகவானுக்கு அபிஷேக, அர்ச்சனை செய்து வழிபடுவதால் குறைகள் நிவர்த்தியாகும். பச்சைப் பயறு சுண்டல் செய்து புத பகவானுக்கு நிவேதனம் செய்வதால் கல்வித் தடைகள் விலகும்.

மேஷம்: எதிலும் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர். பிள்ளைகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவர். வியாபாரம் லாபம் தரும். மாணவர்கள் உயர்கல்வியில் ஆர்வம் காட்டுவர்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கோபம் வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது.

மிதுனம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்து வந்த ஈகோ பிரச்சினைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பு விஷயமாக அலைச்சல் உண்டு.

கடகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்க பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். திடீர் பயணங்கள் உண்டு. பழைய நண்பர், உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்: நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெரியோரின் ஆசி கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி கிட்டும். கல்யாண முயற்சிகளும் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.

கன்னி: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட வேலை முடியும்.

துலாம்: மறைமுக எதிர்ப்புகளை வெல்வீர்கள். வாகனம் செலவுவைக்கும். தம்பதிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வரும்.

விருச்சிகம்: திடீர் பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். அதிரடியாக சில முடிவுகள் எடுத்து அசத்துவீர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஆதரவு தருவார்கள்.

தனுசு: அலுவலக வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வரும். குடும்பத்தாரிடம் தேவையற்ற விவாதங்கள் வேண்டாம். வாகனத்தை மாற்றுவீர். மற்றவர்களை பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்: விருந்தினர் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பர். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் விலகும். திடீர் பயணங்கள் ஏற்படும்.

கும்பம்: தடைபட்ட செயல்கள் நிறைவேறும். எதையும் சமாளிக்கும் மனோபலம் கிடைக்கும். ஆன்மிகத்தில் மனம்லயிக்கும். அண்டை அயலாரின் ஆதரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

மீனம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வாகனத்தை மாற்ற வழி பிறக்கும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *