செந்தில் பாலாஜி: விசாரணையை தள்ளி வைக்கக் கோரிய மனு; தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி அல்லி! | minister senthil balaji case legal proceedings update

Whatsapp Image 2023 06 14 At 15 49 54.jpeg

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், 2023 ஜூன் 14-ம் தேதி கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்த்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் ஜனவரி 22-ம் தேதி குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்ய தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் பதிவுசெய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணையைத் துவங்கக் கூடாது என்றும், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரி… செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜாரானர். அப்போது அவர், “மத்தியக் குற்றப்பிரிவு வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில், அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்ததே செல்லாததாகிவிடும்” எனக் கூறினார். 

மேலும், வழக்கு தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்ட ஆணவங்களின் விவரங்களைத் தங்களுக்கு வழங்கவில்லை எனவும், இந்த வழக்கில் ஆவணங்கள் திரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *