சமுதாய கல்லூரி விவகாரம்: அமைச்சர் பெரியகருப்பன் சம்பந்தி மீது புகார் எழுப்பும் யாதவர் அமைப்பினர்! | Madurai Yadava college issue and Yadavar community press meet

65bd63afda53c.jpg

முறைப்படி பொதுக்குழு கூட்டத்தை கூட்டாமல் சட்டவிரோதமாக நடந்த தேர்தலில் நவநீதகிருஷ்ணன் ஆட்களும், பாண்டவர் அணி என்ற பெயரில் அவர்களுக்கு எதிராக ஒரு அணியும் போட்டியிட்டார்கள். வாக்கு எண்ணப்பட்டதில் போலியான வாக்கு சீட்டுகள் அதிகம் இருந்ததாக அதிகாரியிடம் புகார் செய்யப்பட்டது. அப்படி இருந்தபோதும் நவநீதகிருஷ்ணன் அணியில் 8 பேரும், பாண்டவர் அணியில் 3 பேரும் வெற்றி பெற்றதாக அறிவித்து பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டார் நிர்வாக அதிகாரி. அதைத் தொடர்ந்து இத்தேர்தலில் முறைகேடு நடந்ததாக கந்தவேலு என்பவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடியாக, இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தபோது, இனி இவ்வழக்கில் தலையிட முடியாது, பதிவுத்துறை சட்டத்தின் கீழ் பதிவுத்துறையில் முறையிட்டு உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று தீர்ப்பளித்தார்கள்.

பெரியகருப்பன்

பெரியகருப்பன்

பொதுக்குழுவை கூட்டாமல் தேர்தல் நடத்தியதால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் நவநீதகிருஷ்ணன் ஆட்களால் படிவம் -7 சமர்பிக்க முடியாததாலும், கல்லூரி நிர்வாகத்தில் ஏகப்பட்ட முறைகேடு நடப்பதாக உயர்கல்வித் துறையினரிடம் யாதவர் கல்வி நிதியின் உண்மையான உறுப்பினர்கள், முன்னாள் மாணவர் சங்கத்தினர் ஏற்கனவே புகார் அளித்திருந்ததாலும் போலியாக தேர்வு செய்யப்பட்ட நவநீதகிருஷ்ணனின் ஆட்களை வெளியேற்றி, அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகக் குழு அமையும்வரை தற்காலிக நடவடிக்கையாக மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் நிர்வாகத்தில் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பிரச்னைகள் நடந்தபோதெல்லாம் ராஜகண்ணப்பன் உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்கவில்லை. நீதித்துறை, பதிவுத்துறை சம்பந்தப்பட்ட இந்த பிரச்னைக்கு அவர்தான் காரணம் என்று அவதூறு பரப்புகிறார்.

யாதவர் சமுதாய மக்களுக்கு அரசியலில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ராஜகண்ணப்பன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் இருக்கும் பக்கம்தான் சமுதாயம் இருக்கும். தி.மு.க ஆட்சியில்தான் இரண்டு யாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சமுதாய மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள இந்த அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பிவிட நவநீதகிருஷ்ணன் தீவிரமாக செயல்படுகிறார். சமீபத்தில், பெரியகருப்பன் தலைமையில் நடந்த இவருடைய பிறந்த நாள் விழாவில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டு கூடிப்பேசியுள்ளனர். தி.மு.க-வுக்கு யாதவர் வாக்குகள் கிடைக்காது, போராட்டம் நடத்துவேன் என்று பேசி வருகிற நவநீதகிருஷ்ணனை அதே தி.மு.க அரசில் அமைச்சராக உள்ள பெரியகருப்பன் கண்டிக்காமல் உள்ளதன் மூலம் அவர்களின் நோக்கம் தெரிகிறது?” என்றனர்.

ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்களும் பெரியகருப்பனின் சம்பந்தி ஆதரவாளர்களும் மாற்றி மாற்றி விமர்சித்து வருவது தென்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *