கேரளா: 12 வயது மகள் சிறார்வதை; 11 வயது மகளுக்கு தொல்லை – கொடூர தந்தைக்கு 123 ஆண்டுகள் சிறை | Kerala daughter sexual abuse case, Father sentenced 123 years

83264 Thumb.jpg

2021-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டுவரை மகளை சிறார்வதை செய்துள்ளார் அவர். இதைத்தொடர்ந்து, 12 வயது மகளை சிறார்வதை செய்ததாகவும், 11 வயது மகளுக்கு தொல்லை கொடுத்ததாகவும் எடவண்ண போலீஸார் போக்சோ வழக்கு பதிவுசெய்து சிறுமியின் தந்தையை 2022-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கு மஞ்சேரி பாஸ்ட் ட்ராக் கோர்ட்டில் நடந்துவந்தது. வழக்கு நடந்த சுமார் ஒன்றரை ஆண்டுகள் சிறுமியின் தந்தைக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. அவர் கோர்ட் கஸ்டடியில் சிறையிலேயே உள்ளார்.

சிறார் வதை

சிறார் வதை
சித்திரிப்புப் படம்

இந்த நிலையில் மகளை சிறார்வதை செய்த தந்தைக்கு 123 வருடம் சிறை தண்டனையும், இரண்டு வழக்குகளிலும் சேர்த்து ஏழு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அஷ்ரப் உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அஷ்ரப் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கவேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *