`கனடா தேர்தலில் இந்திய தலையீடா?’ – புது சர்ச்சையும் பின்னணியும் | Indian interference in Canadian elections?” – New controversy and background

Whatsapp Image 2023 09 20 At 13 50 26.jpeg

அதற்கு உடனடியாகப் பதிலடி கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை, “கனடா பிரதமரின் பேச்ச்சை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். கனடாவில் நடந்த வன்முறைச் சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பிருப் பதாகச் சொல்வது அபத்தமானது, உள்நோக்கம் கொண்டது. கனடாவில், கொலை, மனிதக் கடத்தல், ஆர்கனைஸ்டு குற்றங்களுக்கு இடமளிப்பது ஒன்றும் புதிதல்ல. இது போன்ற குற்றங்களுடன் இந்தியாவைத் தொடர்புப் படுத்துவதை முற்றிலும் நிராகரிக்கிறோம்! பாதுகாப்பற்ற சூழல் நிலவும் கனடாவில் வாழும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!’’ என காட்டமாகக் கூறியது.

இந்தியா- கனடா

இந்தியா- கனடா

இதையடுத்து, கனடா அரசாங்கம் தனது நாட்டிலுள்ள கனடாவுக்கான இந்தியத் தூதரக அதிகாரி பவன் குமார் ராயை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. பதிலுக்கு, இந்திய அரசும் இந்தியாவுக்கான கனடா தூதரக அதிகாரி ஆலிவர் சில்வெஸ்டரை நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டது. மேலும், கனடா நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதையும் தற்காலிகமாக நிறுத்திவைத்து அதிரடி காட்டியது இந்தியா. அதைத் தொடர்ந்து, பணிந்து வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “நாங்கள் பிரச்னை செய்ய விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம்” எனக்கூற சர்ச்சை விவகாரம் சற்று தணிந்தது.

ஜஸ்டின் ட்ரூடோ - மோடி

ஜஸ்டின் ட்ரூடோ – மோடி

மீண்டும் வெடித்த புதிய சர்ச்சை:

இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய சர்ச்சை பூதாகரமாகக் கிளம்பியிருக்கிறது. அதாவது, கனடாவின் உளவு அமைப்பான, கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை (CSIS) ஓர் ஆய்வறிக்கையை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. வெளிநாட்டு தலையீடுகள்(Foreign Interference and Elections) மற்றும் தேர்தல்கள் என்ற தலைப்பின்கீழ் வெளியிடப்பட்டிருக்கும் அந்த ஆய்வறிக்கையில், இந்தியாவை `வெளிநாட்டு அச்சுறுத்தல்’ என்று குறிப்பிடிருப்பதாகவும், கனடாவில் நடக்கவிருக்கும் தேர்தலில் இந்தியா தலையிட்டு, ஜனநாயகத்தை பலவீனப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுடிருக்கிறது. மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதுவரையில், கனடா அரசாங்கம் தங்கள் நாட்டில் நடைபெறும் தேர்தல்களில், சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் உள்ளடி வேலை பார்ப்பதாக குற்றம்சாட்டி வந்த நிலையில், முதல்முறையாக அந்த லிஸ்டில் இந்தியாவையும் சேர்த்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *