அன்று பாடம் சொல்லித்தந்த இடம்; இன்று இளைஞர்கள் சீரழியும் இடம் – இந்த அவலம் `சென்னை’யில் தான் | Old school condition in chennai saligramam

School.jpg

விசாரித்ததில், பல பேர் வெளியிலிருந்து இங்கு வந்து குப்பைகளை கொட்டுவதும், அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரிந்தது. சனி ஞாயிறு போன்ற விடுமுறை நாள்களில் மாலை 6 மணிக்கு மேல் நிலைமை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் என்பதையும் வள்ளி அம்மா வேதனையுடன் குறிப்பிட்டார்.

இந்த பூங்கா 4 வருடத்திற்கு முன்பு ஜெயக்குமார் என்பவற்றின் தலைமையில் காலணியைச் சேர்ந்தவர்களின் உதவியோடு நன்கு பராமரிக்கப் பட்டு வந்தது. சுதந்திர தினங்களில் கொடி ஏற்றுவது முதல் எல்லா பாதுகாப்பு வசதிகளோடும் இப்பூங்கா மக்களால் நன்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. அவரின் மரணத்திற்குப் பின்னரே இதன் பராமரிப்பு நின்றுபோனது என்கிறார்.

ஆக, அரசு தனது உரிய நடவடிக்கைகளால் இப் பூங்காவைச் சீரமைத்து ஒரு காவலரை நியமித்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கை. அதே சமயம் இராமலிங்கா மிஷன் பள்ளி இருந்த இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். இரண்டுமே ஒரே சமயம் செய்ய வேண்டும் என்கிறார்கள். ஏனெனில் பூங்காவைப் பராமரித்து பள்ளி இருந்த இடத்தௌ விட்டு விட்டால் எந்த பயனும் இருக்காது. இளஞ் சிறுவர் சிறுமிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வந்த நடுநிலைப் பள்ளி இன்று இளைஞர்கள் குடித்துச் சீரழியும் இடமாக மாறியிருப்பது பெரும் அவலம் தானே!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *