Dmk Election Manifesto For Parliamentary Elections Mp Kanimozhi In Thoothukudi | நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை என்ன அம்சங்கள் இடம் பெரும்

364596 Mkstalin.jpg

நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் இரண்டாவது நாளாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெறுகின்றனர். 2024 மக்­க­ளவை தேர்­த­லை­யொட்டி, தேர்­தல் அறிக்கை தயா­ரிப்­ப­தற்­காக தி.மு.க. துணைப் பொதுச்­செ­ய­லா­ளர் கனி­மொழி கருணாநிதி எம்.பி. தலை­மை­யில் 11 பேர் கொண்ட குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், திமுக சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர் – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர் – அமைச்சர் டி.ஆர்.பி.இராஜா, திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா எம்.பி., திமுக மருத்துவ அணிச் செயலாளர் மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ., சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் படிக்க | தனிச் சின்னம் என்கிற கேள்விக்கு இடமில்லை: மதுரையில் ஓபிஎஸ்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி­வு­ரைப்­படி இக்­குழு நேற்று (05.02.24) முதல், தமிழ்­நாட்­டின் முக்­கிய நக­ரங்­க­ளுக்கு சுற்­றுப்­ப­ய­ணத்தை தொடங்கி உள்­ளது. உரி­மை­களை மீட்க ஸ்டாலி­னின் குரல் – நாடா­ளு­மன்­றத்­தில் ஒலித்­திட வேண்­டிய தமிழ்­நாட்­டின் கருத்­துக்­கள் என்ற தலைப்­பில், பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு வருகிறது.  திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தலைமையிலான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் நேறறு (05.02.24) தூத்துக்குடியில் மக்களை நேரில் சந்தித்து பரிந்துரைகளை பெற்றனர். தூத்துக்குடி, விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கோரிக்கைகளை வழங்கினர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு இன்று(06.02.24) கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களை சந்திக்கின்றது. காலை 9:30 மணி முதல், நாகர்கோவில் தேரேகால் புதூரரில் அமைந்துள்ள கெங்கா கிராண்டியூர் திருமண மண்டபத்தில் வைத்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றுக்கொள்கின்றனர். அதில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர்.  வணிகர் சங்கங்கள், விவசாயிகள், மீனவர் சங்கங்கள், தொழில் முனைவோர், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், பல்வேறு அமைப்புகளைச்சேர்ந்தவர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் தங்கள் கோரிக்கைகளை அளிக்கின்றனர்.

நேற்று தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தூத்துக்குடியில் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல்வேறு தரப்பட்ட தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மருத்துவர்கள், மீனவர்கள், மாணவர் சங்கங்கள், தொழிலாளர் நல பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை நேரடியாக கேட்டு  மனுக்களாக பெற்றனர்.  

மேலும் படிக்க | Saidai Duraisamy Son: சைதை துரைசாமி மகன் மாயம்…? சட்லஜ் ஆற்றில் விழுந்த கார் – விபத்து ஏற்பட்டது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Credit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *