`கிடைத்தது போதும் ஓபிஎஸ்… இரண்டில் செட்டில் ஆகும் டிடிவி?!’ – பாஜக-வின் எலெக்‌ஷன் பிளான்!

Whatsapp Image 2023 05 08 At 19 21 20.jpeg

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால் அ.தி.மு.க – பா.ஜ.க உறவு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. இதன்பின்னர், அ.தி.மு.க-வை விமர்சிப்பதை முற்றிலுமாக தவிர்த்த பா.ஜ.க, மறைமுகமாக கூட்டணிக்கு தூது விட்டது. இதற்கு எடப்பாடி மசியவில்லை. இதனால் ‘எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லையென்றால் அதிமுக பெரிய விலை கொடுக்கவேண்டும்’ என்று இரண்டாம் கட்டத் தலைவர்களை வைத்து அ.தி.மு.க-வை அசைக்க முயன்றது பா.ஜ.க. இதற்கும் எடப்பாடி தரப்பில் எந்த பதிலும் வரவில்லை.

டெல்லி பாஜக தலைமை அலுவலகம்

இந்நிலையில்தான், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மூலம் கூட்டணியை புதுப்பிக்க தூதுவிட்டது பா.ஜ.க. ஆனாலும், எடப்பாடி வளைந்து கொடுக்கவில்லை. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

இதனால், மூன்றாவது அணியை அமைக்கும் தனது பிளான் பி-யை தமிழ்நாட்டில் செயல்படுத்த ஆயத்தம் ஆகிறது பா.ஜ.க. அதற்காக ஓ.பி.எஸ் மற்றும் தினகரனிடம் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறது.

அதன்படி, பா.ஜ.க கூட்டணியில் இணையும் ஓ.பி.எஸ்ஸுக்கு மூன்று சீட்டும், தினகரனுக்கு இரண்டு சீட்டும் ஒதுக்க டெல்லி பா.ஜ.க முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக ஓ.பி.எஸ் – தினகரனுக்கு பொதுவாக இருக்கும் அமமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்.

டி.டி.வி தினகரன்

“வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வுடன்தான் கூட்டணி என்பது 99 சதவிகிதம் உறுதியாகிவிட்டது. இதனால், தொகுதி பங்கீடு குறித்து தற்போது பேச்சுவார்த்தை நடக்கிறது. அதன்படி, தேனி, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, சிதம்பரம், மதுரை, இராமநாதபுரம், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டோம். இதில் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் ஓட்டு அதிகமாக உள்ள 10 தொகுதிகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால், சிவகங்கை, திருச்சி என இரண்டு தொகுதிகளை தருவதாக பாஜக சொல்கிறது. எதிர்பார்த்தது 10… அவர்கள் தருவது 2.

இது டிடிவியை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டது. இருப்பினும், தாமரையில் போட்டியிடவேண்டுமென்று பாஜக வலியுறுத்துகிறது. ஆனால், அதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் டிடிவி. மேலும், குக்கர் சின்னம் வேண்டுமென்றும் கேட்டு இருக்கிறார்.

அதேநேரத்தில், ஓ.பி.எஸ்ஸுக்கு மூன்று சீட் கொடுக்க பா.ஜ.க முடிவுவெடுத்து இருக்கிறது. அதன்படி, தேனி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் ஓகே ஆகி இருக்கிறது. தனக்கு கூடுதல் சீட் வேண்டுமென்று அவரின் தரப்பில் எதுவுமே கேட்கப்படவில்லை. கிடைத்ததுபோதும் என்று நினைத்துவிட்டார். என்னதான் தான் இரட்டை இலையில் போட்டியிடபோவதாக ஓ.பி.எஸ் சொன்னாலும், அதற்கு கொஞ்சமும் வாய்ப்பு இல்லை என்பது அவருக்கும் தெரியும். பாஜக-வின் முடிவின்படி, ஓ.பி.எஸ்ஸுக்கு கிடைக்கும் மூன்று தொகுதிகளிலும் பா.ஜ.க வேட்பாளராக தாமரையில் தனது ஆதரவாளர்களை களமிறக்க உள்ளார்.

வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம்

இதுபோக ஒரு ராஜ்யசபா சீட்டும் ஓபிஎஸ்ஸுக்கு ஓகே ஆகியிருக்கிறது. இந்த தேர்தலில் தோற்றாலும், தனது மகனுக்கு ராஜ்ய சபா சீட் வாங்கி அழகு பார்க்க நினைக்கிறார் ஓ.பி.எஸ்” என்றனர் விரிவாக.

தினகரன், ஓ.பி.எஸ்-ஸை இணைத்து என்ன பிளான் வைத்து இருக்கிறது பா.ஜ.க என்று கமலாலய புள்ளி ஒருவரிடம் பேசும்போது, “தென்மாவட்டத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர்கள், இந்து நாடார்கள் ஓட்டு பா.ஜ.க-வுக்கு கணிசமாக இருப்பதாக அண்ணாமலை ஒரு டேட்டா வைத்து இருக்கிறார். இத்துடன் தினகரன், ஓ.பி.எஸ்ஸை வைத்து முக்குலத்தோர் ஓட்டு கிடைத்தால், தென்மாவட்டங்களில் வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது. இதை முன்னிறுத்திதான் பணிகள் நடக்கிறது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *