இழுக்கும் பாஜக… சி.வி.சண்முகத்தை அனுப்பிய எடப்பாடி – `தைலாபுர’ சந்திப்பின் பின்னணி என்ன?! | Background of ADMK MP C.V.Shanmugam met with PMK founder Ramadoss

Whatsapp Image 2024 02 06 At 11 18 56 Am.jpeg

அதன்படி பா.ம.க தலைவர் அன்புமணியிடம் ஜி.கே வாசன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில்தான், தோட்டத்தில் மருத்துவர் ராமதாஸை சந்தித்திருக்கிறார் அ.தி.மு.க எம்.பி சி.வி.சண்முகம். நேற்று 05.02.2024 இரவு நடைபெற்ற அந்த சந்திப்பு குறித்து பத்திரிகைக்கரர்களுக்கு மட்டுமல்ல, கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. அவர்களின் சந்திப்பு புகைப்படத்தை தைலாபுரம் தரப்புதான் இன்று காலை கசிய விட்டிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பா.ம.க-வின்  முன்னணி நிர்வாகி ஒருவர், “பா.ஜ.க-வுடன் சென்றால் தேர்தலில் வெற்றி பெற்றாலும், பெறாவிட்டாலும் எங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கிடைக்கும்தான். அதன்மூலம் மத்திய அமைச்சர் வாய்ப்பு கூட கிடைக்கலாம் என்று நினைக்கிறார் சின்னவர்(அன்புமணி). ஆனால் அப்படி ஒரு முடிவெடுத்தால், அது மண் குதிரையில் சவாரி செய்வது போலாகிவிடும் என்பதுடன், 2026 சட்டப்பேரவை தேர்தலில் நாம் பலமாக அடி வாங்குவோம் என்பது மருத்துவர் அய்யாவின் கணக்கு.

அதனால் பா.ஜ.க நடத்தும் பேச்சு வார்த்தை டிமாண்டை காட்டி, அ.தி.மு.க-விடம் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்யசபாவுடன் சீட்களையும், சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளையும் பெறலாம் என்று நினைக்கிறார் மருத்துவர் அய்யா. நேற்று இரவு நடைபெற்ற அந்த சந்திப்பில் 9+1 சீட்கள் கேட்டிருக்கிறோம். சி.வி.சண்முகமும் எடப்பாடியாரிடம் ஆலோசித்து சொல்வதாக கூறிச் சென்றிருக்கிறார். கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பா.ம.க வந்ததற்கு முக்கிய காரணம் சி.வி.சண்முகம்தான். அந்த செண்டிமெண்டின் அடிப்படையில்தான், தற்போதும் அவரை அனுப்பி வைத்திருக்கிறார் எடப்பாடி. அந்த செண்டிமெண்ட் இந்த முறையும் சாதகமாவதற்கு வாய்ப்புகள் அதிகம்” என்றார் குதூகலத்துடன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *