"இந்து முன்னணி… ஒரு காலத்தில் மரியாதை இருந்தது; இப்போது மோசமாகிவிட்டது" – உயர் நீதிமன்ற நீதிபதி

Madurai High Court.jpg

கடந்த ஜனவரி 7-ம் தேதி இரவு தஞ்சாவூர் ரயில்வே காவல்துறையினர் குடியிருப்பு அருகே ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் பெண் போலீஸ் ரோந்து சென்றபோது, குபேந்திரன், முத்தமிழ்செல்வன், ரவி ஆகியோர் கோயிலில் விளக்கேற்றும் பகுதியில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர்.

மது

`கோயில் பகுதியில் மது அருந்தக்கூடாது, எழுந்து செல்லுங்கள்’ என்று அவர்களிடம் பெண் காவலர் ஆதிநாயகி கூறியுள்ளார். அதற்கு அவர்கள், “நாங்கள் இந்து முன்னணியில் பெரிய பொறுப்பில் உள்ளோம், இங்கிருந்து செல்ல முடியாது” எனக்கூறி பெண் போலீஸை ஆபசமான வார்த்தைகளில் திட்டியது மட்டுமின்றி, ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்பு ஆட்களை திரட்டி அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த கூடுதல் போலீஸார் அங்கு சென்று, பெண் போலீசிடம் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டு பிரச்சனை செய்த குபேந்திரன், முத்தமிழ்செல்வன், ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தஞ்சாவூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை உயர் நீதிமன்றக் கிளை

ஏற்கனவே ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இந்து முன்னணி நிர்வாகி குபேந்திரன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “ரோந்து பணியில் இருந்த பெண் போலீஸை குடிபோதையில் கெட்ட வார்த்தைகளால் திட்டி, மோசமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்கள். இவர் மீது வேறு சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிட்டார்.

ஜாமீன் மனு

இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, “ஏற்கனவே ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.

சமூகத்தில் இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மிகுந்த மரியாதை இருந்தது. தற்போது காவல்துறையே பார்த்து பயப்படும் அளவிற்கு மோசமாகி விட்டது. மேலும், மனுதாரர் நடந்து கொண்டவிதம் ஏற்க்கதக்தல்ல” எனக் கூறி குபேந்திரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் இவ்வழக்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *