`இங்கிலாந்து மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய்’ – அடுத்த மன்னர் குறித்த `Nostradamus’ கணிப்பு?!| England King Charles affected cancer, who is next king

Gridart 20240206 094703117.jpg

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி இங்கிலாந்து ராணியும், தன்னுடைய தாயுமான எலிசபெத் உயிரிழந்த பிறகு மன்னராகப் பதவியேற்று ஒன்றரை வருடம் ஆன நிலையில், சார்லஸுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால், மன்னர் பதவியிலிருந்து ஒருவேளை அவர் விலகும் பட்சத்தில் அடுத்த மன்னர் யார் என்ற விவகாரம் தற்போது விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், நோஸ்ராடாமஸ் என்று அழைக்கப்படும் மைக்கேல் டி நோஸ்திரதாம் என்பவர் எதிர்காலத்தில் நடக்கக்கூடியவை என்று கணித்து எழுதிவைத்த புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் சம்பவம், இங்கிலாந்தின் தற்போதைய மன்னர் சார்லஸைக் குறிப்பதாக ஜோதிடர்கள் சிலர் கூறுவது பேசுபொருளாகியிருக்கிறது.

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் - இளவரசர் ஹாரி

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் – இளவரசர் ஹாரி

அதாவது நோஸ்ராடாமஸின் புத்தகத்தில், `தீவுகளின் மன்னர், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவரால் பதவியிலிருந்து அபகரிக்கப்படுவார்” என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதில், தீவுகளின் மன்னர் என்பது சார்லஸைக் குறிப்பதாகவும், மன்னருக்கான அடையாளமே இல்லாத ஒருவர் என்பது ஹாரியைக் குறிப்பிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.

மைக்கேல் டி நோஸ்திரதாம் (Michel de Nostredame), சுருக்கமாக நோஸ்திரதாமுஸ் உலகின் சிறந்த குறி சொல்லும் நபர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவரது படைப்பான “லெஸ் புரோபெடீஸ்” மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்குகிறார். இப்படைப்பு 1555 -ம் ஆண்டில் முதலில் அச்சடிக்கப்பட்டது என்கிறார்கள். இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நோஸ்ராடாமஸ், இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார்.

இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *