`இப்படியோர் மூடநம்பிக்கையா… இன்னும் ஒரு வாரத்தில் அகற்றங்கள்!’ – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வேதனை | justice anand venkatesh expressed his agony over superstition

64ee92200df3d.jpg

இது தொடர்பாக, புகார் அளித்தபோது, இது உரிமையியல் பிரச்னை என காவல்துறையினர் புகாரை முடித்துவிட்டதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கு தொடர்பாக மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களை ஆய்வு செய்த பிறகு, “மனுதாரருக்குச் சொந்தமான சொத்தின் எதிரே கல் நடப்பட்டிருப்பது தெரிகிறது. அந்தக் கல்லை ஒரு பச்சை துணியால் மூடி, அதை சிலை என்று அழைக்க ஒருவரால் முயற்சி செய்யப்படுகிறது. சாலையில் ஒரு கல்லை நட்டு, துணியைச் சுற்றி, பூஜைகள் செய்து, சிலை எனக் கூறும் அளவுக்கு நாட்டில் மூடநம்பிக்கைகள் நிலவுவது வேதனை அளிக்கிறது.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

சாலையில் நடப்பட்ட கல், சிலையா… இல்லையா என உரிமையியல் நீதிமன்றம் முடிவெடுப்பது சாத்தியமற்றது. இதற்காக இந்த வழக்கை விசாரிப்பது என்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் செயல். அதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில், எந்த நீதிமன்றமும் திருச்சபைக்கான அதிகார வரம்பைப் (ecclesiastical jurisdiction) பயன்படுத்துவதில்லை.

இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் தொடர்ந்து நிலவி வருவது, மிகவும் துரதிஷ்டவசமானது. மேலும் காலத்திற்கேற்றபடி சமூகமும் மக்களும் மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது” எனக் கூறி, மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில், சாலையில் நடப்பட்டுள்ள கல்லை ஒரு வாரத்தில் அகற்ற வேண்டும் என பல்லாவரம் சரக காவல் உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *