அரசுப் பள்ளி கட்டுமான விவகாரம்: `மிரட்டுகிறார் திமுக ஊ.தலைவரின் கணவர்’ – புகார் கூறும் தலைமையாசிரியை | govt school headmistress alleged that DMK cadre threatened her

Whatsapp Image 2023 03 26 At 8 54 45 Pm 4.jpeg

இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் ராமச்சந்திரனிடம் பேசியபோது, “பள்ளியில் கட்டப்படும் கழிவறைத் தொட்டி ஒழுங்காக கட்டப்படவில்லை. மாணவர்களின் நல கருதிதான் இதனைச் சென்று கேட்டேன். 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் கட்டடங்கள் சரியாக இல்லாததால்தான், அவர்களிடம் முறையிட்டேன். ஊராட்சி நிதி 2 லட்சம் ரூபாய் கொடுத்து நானே கட்டிக்கொடுக்கிறேன் என்று கூறியுள்ளேன். இதில், வேறு ஏதும் பிரச்னை இல்லை” என்றார்.

ஊராட்சி மன்றத் தலைவர் சியாமளா தேவி, தன் கணவர் ராமச்சந்திரனுடன்

ஊராட்சி மன்றத் தலைவர் சியாமளா தேவி, தன் கணவர் ராமச்சந்திரனுடன்

இது குறித்து கருப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் மனோன்மனியிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட தலைமையாசிரியையிடம் நேரில் சென்று விசாரித்தோம். அவர், `கழிப்பறைத் தொட்டி கட்டுவது சரியாக இல்லையென்றுதான், ஊராட்சித் தலைவரின் கணவர் என்னிடம் கேட்டார்’ என்றார். மற்றபடி இதில் வேறு ஏதும் பிரச்னை இல்லை” என்றார்.

மாவட்டக் கல்வி அலுவலர் கபீரிடம் பேசியபோது, “சம்பந்தப்பட்ட வீடியோவை எனக்கு அனுப்பிவையுங்கள். நான் அதிகாரிகளிடம் கூறி, உடனே விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளச் சொல்கிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *