ஜோதிடம்

1188941.jpg

மேஷம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். சேமிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

ரிஷபம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்கள் திருப்தி தரும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். அழகு, இளமை கூடும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைக் கடந்து வெற்றி அடைவீர்கள். கணவன் – மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

சிம்மம்: ஒருவித சலிப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து போகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கொஞ்ச நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. நிதானமுடன் செயல்படுங்கள்.

கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல் நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கணவன் – மனைவிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

துலாம்: வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். தாய்வழி உறவுகளால் ஆதாயமுண்டு. கடன் தொகை வசூலாகும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் வரும். மூத்த சகோதரர் உதவுவார்.

விருச்சிகம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

தனுசு: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.

மகரம்: எடுத்த காரியங்கள் நீண்ட இழுபறிக்குப் பின்னர் முடியும். சொந்தபந்தங்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பயணங்கள் அலைச்சல் தரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு.

மீனம்: உறவினர் மத்தியில் அந்தஸ்து உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். ஆன்மிக காரியங்களை முன்னின்று செய்வீர்கள்.

– ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘இந்து தமிழ் திசை’யின் கருத்துகள் அல்ல.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *