பிரசன்னா பி.வராலே: அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவன் டு உச்ச நீதிமன்றதின் 3-வது பட்டியலின நீதிபதி!| SC community based kartaka high court chief justice appointed as supreme court

Whatsapp Image 2024 01 25 At 2 18 39 Pm.jpeg

பழங்குடி பெண்ணுக்காக குரல்கொடுத்த வராலே!

கடந்த ஆண்டு டிசம்பரில், பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பணக்கார வீட்டு பெண்ணுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அப்போது, அந்த பணக்கார வீட்டு குடும்பத்தினர் பழங்குடியின இளைஞனின் தாயைக் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அரங்கேறியது. இதனையறிந்த வராலே, தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடுத்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி பிரசன்னா பி.வராலே

உச்ச நீதிமன்ற நீதிபதி பிரசன்னா பி.வராலே

அந்த வழக்கில் தன்னுடைய கண்டிப்பை வெளிப்படுத்திய வராலே, “இதுபோன்ற நிகழ்வுகள் எப்படி நிகழ்கிறது… ஒருபக்கம் ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்-ஐ கொண்டாடுகிறோம். ஆனால், சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுதான் இங்கு நிலைமை. இந்த தருணத்தில், ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட் (Hamlet) நாடகத்தில் வரும், `Something is rotten in the state of Denmark’ என்ற புகழ்பெற்ற வாசகம்தான் நினைவுக்கு வருகிறது” என்று வருத்தத்துடன் கூறினார். இவ்வாறு, பெண்கள், ஒடுக்கப்பட்டோருக்கு இன்னல் வரும்போது நீதிபதியாக தாமாக முன்வந்த வராலே, உச்ச நீதிமன்றத்திலும் தற்போது அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இரண்டு தசாப்த சட்டப் பணி அனுபவம், சமூக சிந்தனையுடன் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இன்று பதவியேற்றிருக்கும் வராலேவின் நீதிப் பணி தொடர வாழ்த்துகள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *