“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் காஸா நிலையை நாமும் சந்திக்க நேரும்!” – ஃபரூக் அப்துல்லா | If we do not find a solution through dialogue with Pakistan, we face a Gaza situation, says Farooq Abdullah

Screenshot 2023 12 26 16 36 34.png

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமான காஷ்மீர் பிரச்னை என்பது நெடுங்காலமாக இருந்துவருகிறது. ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு முறையும் தீவிரவாதிகள் அத்துமீறல், தாக்குதல்கள், பதில் தாக்குதல், உயிரிழப்புகள் ஏற்படும்போதெல்லாம் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை விடுத்துக்கொள்கின்றன. இப்படியிருக்க, கடந்த ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போர் வெடித்தபோது, `போர் என்பது தீர்வல்ல, பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்” என்று இந்திய பிரதமர் மோடி தொடர்ச்சியாகக் கூறிவந்தார்.

இந்தியா - பாகிஸ்தான்

இந்தியா – பாகிஸ்தான்

அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு தொடக்கத்தில் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரீப், `இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக இருக்கிறது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். பேச்சுவார்த்தைக்குப் பிரதமர் மோடி சம்மதிக்க வேண்டும்’ எனக் கூறியிருந்தார். ஆனால், அதற்குப் பிறகு அதுபற்றி எதுவும் நடக்கவில்லை. இத்தகைய சூழலில், ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேர் பலியானது, மசூதிக்குள் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் சமீபத்தில் அரங்கேறின.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *